டிசம்பர் 7, 2017
Original SC order link : http://supremecourtofindia.nic.in/supremecourt/2016/33518/33518_2016_Judgement_07-Dec-2017.pdf
புனையப்பட்ட பொய் வழக்கில் பரமஹம்ஸ நித்யானந்தர் அவர்களுக்கு சாதகமாக மிகப்பெரும் தார்மீக வெற்றி கிடைத்துள்ளது!!!
பரமஹம்ஸ நித்யானந்தர் அவர்கள் மீது சுமத்தப்பட்ட(புனையப்பட்ட) பொய் வழக்கில், சர்ச்சைக்குறிய வீடியோ போலியானது என்றும், அந்த கற்பழிப்பு வழக்கில் பாதிக்கப்பட்டதாக கூறப்படுபவர் போலியானவர் என்றும், அவரின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்று நிரூபிக்கக்கூடிய ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் அனைத்தும் நீதிமன்றத்தின் பார்வையில் இருந்து வேண்டுமென்றே மறைக்கப்பட்டது. அந்த ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களை வழக்கில் இனைத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க, கனம் கர்நாடக நீதிமன்றம் முன்பு உத்தரவிட்டிருந்தது. மேதகு கனம் உச்ச நீதிமன்றமும் அந்த முக்கிய உத்தரவை உறுதி செய்து இப்பொழுது தீர்ப்பளித்துள்ளது. மேலும் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள ஆதாரம் மற்றும் ஆவணம் எதையும் மறைக்க கூடாது என்றும் அவை வழக்கோடு சேர்ந்த ஒரு பகுதி, வழக்கின் அங்கம் என்றும் உச்ச நீதிமன்றம் ஆணித்தரமாக கூறியுள்ளது.
தொடுக்கப்பட்ட இந்த பொய் வழக்கில் “கற்பழிக்கப்பட்டதாக பொய் குற்றம் சுமத்தியவரின் குற்றச்சாட்டுகளுக்கு எதிராகவும், பரமஹம்ஸ நித்யானந்தர் அவர்கள் நிரபராதி என்று நிரூபிக்கக்கூடிய, சந்தேகத்திற்கு இடமில்லாத வலுவான ஆதாரங்களை மறைத்து கர்நாடக சி.ஐ.டி போலீசார் பரமஹம்ஸர் நித்யானந்தர் அவர்களுக்கு பெருத்த அநீதி இழைத்துவிட்டது” என்று கனம் உச்ச நீதிமன்றம் விசாரணை அதிகாரிகளை வன்மையாக கண்டித்துள்ளது.
சந்தேகத்திற்கு இடமில்லாத இந்த ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் அனைத்தையும் நீதிமன்ற ஆவணங்களோடு வழக்கில் சேர்த்து பரிசீலிக்க கனம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்டு, “நிரூபிக்கப்படும் வரை குற்றவாளிதான்” என்று அபான்டமாக பொய்யுரை செய்வதாலும், ஊடகங்கள் மூலமாக அவதூறு தாக்குதல் நடத்தப்பட்டாலும், எதனாலும் விசாரணை பாதிக்கபடக்கூடாது, நேர்மையான விசாரணை நடக்க வேண்டும் என்ற அவசியத்தை – நீதித்துறையின் நோக்கத்தினை, கனம் உச்ச நீதிமன்றத்தின் இந்த முன்னோடியான தீர்ப்பானது அழுத்தமாக நிலைநாட்டியுள்ளது.
மக்களால் நிரம்பிய நீதிமன்ற வளாகத்தில், வழங்கப்பட்ட இந்த சிறப்பு வாய்ந்த தீர்ப்பில்; “பரமஹம்ஸ நித்யானந்தர் அவர்களுக்கு சாதகமாக இருந்த பல முக்கிய ஆவணங்கள் விசாரணை அதிகாரிகளால் வேண்டுமென்றே மறைக்கப்பட்டுள்ளது என்று தெரியவருவதாலும், அந்த ஆவணங்கள் இல்லாமல் இந்த விசாரணை நடைபெறுவது பரமஹம்ஸருக்கு இழைக்கப்படும் அநீதி என்ற காரணத்தாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று நீதிமன்றத்தார் தெரிவித்துள்ளார்கள்.
லெனின் கருப்பன் மற்றும் அவன் கூட்டாளிகளும் சேர்ந்து பரமஹம்ஸ நித்யானந்தர் அவர்களுக்கு எதிராக தீட்டிய சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக, நித்யானந்தர் ஒரு நடிகையோடு இருப்பது போன்ற ஒரு சர்ச்சைக்குரிய போலி வீடியோவை தயாரித்து, அதனை ஊடகங்களின் மூலமாக ஒளிபரப்பி, தீவிரமாக தொடர்ந்து பல அவதூறுகள் செய்தும், அதன் மூலம் கடந்த 2010ம் ஆண்டு பரமஹஸர் மீது பொய் வழக்கு புனையப்பட்டு-போடப்பட்டுள்ளது.
பரமஹம்ஸ நித்யானந்தர் அவர்களுக்கு சாதகமாக, இந்தியாவில் உள்ள் பல்வேறு நீதிமன்றங்களால் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பல சிறப்பான தீர்ப்புகளோடு, உச்ச நீதிமன்றம் இப்பொழுது வழங்கியுள்ள இந்த தீர்ப்பும் சேர்ந்து மேலும் சிறப்பித்துள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு சமூக விரோதிகள் தங்கள் சுயநலனுக்காக பரமஹம்ஸர் மீது தொடுக்கப்பட்ட வழக்கை கனம் கர்நாடக நீதிமன்றம் தள்ளுபடி செய்த்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
பரமஹம்ஸருக்கு சாதகமாக உள்ள அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பிகுமாறு சில மாதங்களுக்கு முன், கனம் கர்நாடக நீதிமன்றம் வழக்கின் விசாரணை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
பரமஹம்ஸ நித்யானந்தர் மீது, இயற்கைக்கு மாறான பாலியல் உறவு குற்றச்சாட்டு சுமத்திய வழக்கின் சாட்சி&பிரதிவாதி வினய் பரத்வாஜ் என்பவருக்கு எதிராகவும் பரஹம்ஸருக்கு சாதகமாகவும், முதன்மை முதுனிலை உரிமையியல் நடுவர் & முதன்மை நீதிமன்ற நடுவர் அவர்கள் அக்டோபர் 16, 2017 அன்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளார்கள். இவ்வழக்கில் ரூபாய் 2,74,94,447.50/- அதாவது இரண்டு கோடியே எழுபத்தி நான்கு லட்சத்து தொன்னூற்றி நான்கு ஆயிரத்து நானூற்றி நாற்பத்தேழு ரூபாயை, தீர்ப்பு வழங்கிய தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள், வழக்கு தொடுக்கப்பட்ட தினத்தில் இருந்து அபராதம் செலுத்தும் நாள் வரை கனக்கிட்டு, ஆண்டிற்கு 9% வட்டியுடன் சேர்த்து அபராதம் செலுத்துமாறு வினை பரத்வாஜுக்கு உத்தரவிட்டு கனம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
நீதிமன்றத்தாரிடமிருந்து மறைக்கப்பட்ட இந்த ஆவணங்களில் தெரியவருவது;
கற்பழிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு சுமத்திய ஆரத்தி ராவ் என்பவரின், 2004 முதல் 2009 வரையிலான மருத்துவ அறிக்கைகளில், அவருக்கு 4(நான்கு) குணப்படுத்த இயலாத, சாதாரண தொடுதலில் கூட எளிதில் பரவக்கூடிய, பால்வினை தொற்றுநோய்கள் இருப்பது தெரியவருகிறது. மேலும் ஆரத்தி ராவின் குற்றச்சாட்டில், கடைசியாக தான் கற்பழிக்கப்பட்டதாக கூறப்படும் தேதியிலிருந்து ஆறு மாதங்கள் கழித்து, 2009ம் ஆண்டு மத்தியில் அவரே தன்னுடைய இ.மெயிலில், “தனக்கும் நித்யானந்தருக்கும் எந்த ஒரு விதமான உடலுறவு தொடர்பும் எப்பொழுதும் இருந்ததில்லை” என்று அவரே ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் கற்பழிப்பு நடந்ததாக அவர் கூறும் நாள் மற்றும் இடங்கள் அனைத்தும் பொருந்தாமல் முரண்பாடுகளோடு இருக்கின்றன. பரமஹம்ஸரின் மருத்துவ அறிக்கையில் அவருக்கு எந்த விதமான பால்வினை நோயும் எப்பொழுதும் இருந்ததில்லை என்றும், அவருடைய உடல் எந்த விதமான உடலுறவிலும் ஈடுபட இயாலாத தன்மையுடையது என்று கூறுகிறது. மேலும் இந்த வழக்கின் முக்கிய சாட்சியான திருமதி. ரஞ்சிதா அவர்கள், “நித்யானந்தரோடு சேர்த்து தன்னை சித்தரிக்கும் அந்த வீடியோ போலியானது என்றும் மார்ஃபிங்க் செய்யப்பட்டது” என்றும் சாட்சியம் அளித்துள்ளார்.
பரமஹம்ஸ நித்யானந்தர் அவர்களுக்கு எதிராக “மிரட்டுதல், அச்சுறுத்தி பணம் பறித்தல், சதிச்செயல்கள் புரிதல், பெண்களை தவறான முறையில் சித்தரித்தல்” போன்ற பல குற்றங்களில் ஈடுபட்டதால் லெனின் மற்றும் ஆரத்தி ராவ் மீது சென்னை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டு விசாரணையும் நடைபெற்று வருகிறது.
மேலும் உண்மையை தெரிந்து கொள்ள: