நித்யானந்த பீடம் – பிடதி, பெங்களூரு
நித்யானந்தர் வழக்கில் மற்றுமொரு மாபெரும் வெற்றி!!!
கனம் “கூடுதல் உரிமையியல் நீதிமன்றம் & முதன்மை குற்றவியல் நீதிமன்றம் – ராமநகரம்”, பரமஹம்ஸ நித்யானந்தர் அவர்களுக்கு சாதகமாக “சமயா நியூஸ் சேனல், அதன் தலைமை செய்தி ஆசிரியர் & தொகுப்பாளர் ரங்கநாத் பரத்வாஜ், திரைப்பட தயாரிபாளார் மதன் படேல், தன்னைத்தானே சமூகசேவகர் என்று அறிவித்துக்கொண்ட பீமா சங்கர் படேல், ஆகியோர் மீது – அச்சுறுத்தல், பொது அமைதியை குலைக்க வேண்டும் என்ற தீய நோக்கத்தோடு அவமதித்தல், கூட்டுச்சதி செய்தல், மற்றும் இந்த நோக்கத்திற்காக பலரை பயன்படுத்தி அவதூறு செய்தல் போன்ற குற்றங்களுக்காக கிரிமினல் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டும், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு அழைப்பானை வழங்க உத்தரவிட்டும்” கனம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு முதல், பரமஹம்ஸ நித்யானந்தருக்கு எதிராக, சமயா நியூஸ் சேனல், வதந்திகளையும், பொய்யான செய்திகளையும், அவதூறு செய்யும் கருத்துக்களையும்-நிகழ்ச்சிகளையும்-செய்திகளையும், வாத-விவாத நிகழ்ச்சிகளையும் தொடர்ந்து ஒளிபரப்பிக்கொண்டிருக்கிறது. இது தொடர்பாக “சமயா நியூஸ் சேனல், சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்டு, ஊடக தர்பார் நிகழ்த்திய இந்த செயல்கள், இந்திவாயில் உள்ள ஊடகங்களால் வாடிக்கையாக ஒன்றாக நடக்க ஆரம்பித்துவிட்டது”, என்று கனம் நீதிமன்றத்தார் இந்திய ஊடகங்கள் பற்றி கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள். மேலும், “சமயா நியூஸ் சேனலும், ரங்கநாத் பரத்வாஜும், இது போன்ற பொய்யான அவதூறு பரப்பும் நிகழ்ச்சிகளை தங்கள் தொலைகாட்சியில் ஒளிபரப்பாமல் சுய கட்டுப்பாடுடன் இருந்திருக்க வேண்டும் என்றும், ஆனால் அவ்வாறு இல்லாமல் கட்டுப்பாடுகளை இழந்து அவதூறுகளை ஒளிபரப்பியிருக்கிறது” என்றும் கனம் நீதிமன்றம் அழுத்தமாக கண்டனம் தெரிவித்திருக்கிறது.
மேலும் “மதன் படேல்” என்ற திரைப்படத் தாயாரிப்பாளர் என்பவருக்கும் நீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. அவர் தயாரித்த “சத்யானந்தா” என்ற திரைப்படம், முழுக்க முழுக்க பரமஹம்ஸ நித்யானந்தரை பற்றி, அவரை தவறாக சித்தரித்து எடுக்கப்பட்ட படமாகும். இந்த திரைப்படம் குறித்து கனம் நகர உரிமையியல் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல் திரைப்படத்தை தணிக்கை செய்யவும் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
“பரமஹம்ஸ நித்யானந்தர் அவர்களின் நற்பெயர் மற்றும் அவரது மரியாதையை குலைக்க வேண்டும், தாழ்த்த வேண்டும், அழிக்க வேண்டும், என்ற நோக்கத்தில், வேண்டுமென்றே பொய்யான அவதூறு செய்யும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியும், பிரசுரித்தும், தொகுத்தும் வழங்கிய குற்றங்கள், மேற்படி குற்றம் சாட்டப்பட்டவர்களால் நடந்தேரியுள்ளது” என்பதை கனம் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
“கொச்சையான வார்த்தைகள் பிரயோகித்து அவதூறு செய்தல், அச்சுறுத்தல், பரமஹம்ஸ நித்யானந்தரின் உயிருக்கு அச்சுறுத்தல் & ஆபத்து விளைவித்தல், போன்ற கடுமையான குற்றங்கள் நடந்துள்ளது” என்பதையும் கனம் நீதிமன்றத்தார் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
பரமஹம்ஸ நித்யானந்தர் அவர்களுக்கு சாதகமாக, பல்வேறு நீதிமன்றங்களால் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பல சிறப்பான தீர்ப்புகளோடு, நீதிமன்றம் இப்பொழுது வழங்கியுள்ள இந்த தீர்ப்பும் சேர்ந்து மேலும் சிறப்பித்துள்ளது. சுயநல சதிகாரர்களால், பரமஹம்ஸ நித்யானந்தர் நடிகை ரஞ்சிதாவோடு இருப்பது போன்று சித்தரித்து, போலி வீடியோ தயாரிக்கப்பட்டு, அதன் மூலம் ஊடக அராஜகங்கள் செய்து, அதன் மூலம் பரமஹம்ஸர் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டன.
கடந்த டிசம்பர் 07, 2017 அன்று, நித்யானந்தர் வழக்கில், மேதகு உச்ச நீதிமன்றம் ஒரு முக்கியமான திருப்புமுனையான தீர்ப்பு வழங்கியுள்ளது. “பரமஹம்ஸ நித்யானந்தர் அவர்களுக்கு சாதகமாக இருந்த பல முக்கிய ஆவணங்கள் விசாரணை அதிகாரிகளால் வேண்டுமென்றே மறைக்கப்பட்டுள்ளது என்றும் அந்த ஆவணங்கள் இல்லாமல் இந்த விசாரணை நடைபெறுவது பரமஹம்ஸருக்கு இழைக்கப்படும் அநீதி என்று” உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இவ்வழக்கின் முக்கிய சாட்சியான திருமதி. ரஞ்சிதா அவர்கள், “நித்யானந்தரோடு சேர்த்து தன்னை சித்தரிக்கும் அந்த வீடியோ போலியானது என்றும் மார்ஃபிங்க் செய்யப்பட்டது” என்று சாட்சியம் அளித்துள்ளதையும், சதிகாரர்களான லெனின் கருப்பன், ஆர்த்தி ராவ் மற்றும் வினய் பரத்வாஜ் ஆகியோருக்கு எதிராக அவர் கூறிய சாட்சியங்களையும், அவர்களுக்கு எதிராக கொடுத்த ஆதாரங்களையும், வழக்கிலிருந்து மறைக்கப்பட்டதை உச்ச நீதிமன்றம் வண்மையாக கண்டித்துள்ளது.
நீதிமன்றத்தாரிடமிருந்து மறைக்கப்பட்ட இந்த ஆவணங்களில் தெரியவருவது;
கற்பழிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு சுமத்திய ஆரத்தி ராவ் என்பவரின், 2004 முதல் 2009 வரையிலான மருத்துவ அறிக்கைகளில், அவருக்கு 4(நான்கு) குணப்படுத்த இயலாத, சாதாரண தொடுதலில் கூட எளிதில் பரவக்கூடிய, பால்வினை தொற்றுநோய்கள் இருப்பது தெரியவருகிறது. மேலும் ஆரத்தி ராவின் குற்றச்சாட்டில், கடைசியாக தான் கற்பழிக்கப்பட்டதாக கூறப்படும் தேதியிலிருந்து ஆறு மாதங்கள் கழித்து, 2009ம் ஆண்டு மத்தியில் அவரே தன்னுடைய இ.மெயிலில், “தனக்கும் நித்யானந்தருக்கும் எந்த ஒரு விதமான உடலுறவு தொடர்பும் எப்பொழுதும் இருந்ததில்லை” என்று அவரே ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் கற்பழிப்பு நடந்ததாக அவர் கூறும் நாள் மற்றும் இடங்கள் அனைத்தும் பொருந்தாமல் முரண்பாடுகளோடு இருக்கின்றன. பரமஹம்ஸரின் மருத்துவ அறிக்கையில் அவருக்கு எந்த விதமான பால்வினை நோயும் எப்பொழுதும் இருந்ததில்லை என்றும், அவருடைய உடல் எந்த விதமான உடலுறவிலும் ஈடுபட இயாலாத தன்மையுடையது என்று கூறுகிறது.
பரமஹம்ஸ நித்யானந்தர் அவர்களுக்கு எதிராக “மிரட்டுதல், அச்சுறுத்தி பணம் பறித்தல், சதிச்செயல்கள் புரிதல், பெண்களை தவறான முறையில் சித்தரித்தல்” போன்ற பல குற்றங்களில் ஈடுபட்டதால் லெனின் மற்றும் ஆரத்தி ராவ் மீது சென்னை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டு விசாரணையும் நடைபெற்று வருகிறது.
நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் நகல் இனைக்கப்பட்டுள்ளது.
Read the article in other languages