ஸ்வாமிஜியிடம் பணத்தையும் சொத்துக்களையும் மிரட்டி
பறிக்கும் முயற்சி தோல்வி அடைந்ததால் தான், சதிக்காரர்கள்
அடுத்த திட்டத்தை அரங்கேற்ற ஆரம்பித்தனர். ஸ்வாமியின்
புகழுக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சியாக போலி வீடியோ
காட்சிகளை, ஊடகங்களில் வெளியிட்டனர்.
போட்டி அதிகரித்த சூழலில், தங்களின் பார்வையாளர்களை தக்க
வைத்துக்கொள்ள, சன் டிவியும், சிறு(மை) பத்திரிகைகளும்
ஸ்வாமிஜிக்கு எதிரான வீடியோவை வெளியிட்டு தங்களின்
தரத்தை தாழ்த்திக் கொண்டன.
சில ஆண்டுகளுக்கு பின், இந்த வீடியோ விவகாரத்துக்காக
டிவியும், சிறு பத்திரிகைகளும் மன்னிப்பு கோர
வலியுறுத்தப்பட்டன; எனினும் இதை யாரும்
பொருட்படுத்தவில்லை. ஸ்வாமிஜிக்கு நேரிட்ட களங்கத்தை
துடைக்க இயலவில்லை. இதை ஒளிபரப்பிய சன் டிவியின்
உரிமம். அப்போது புதுப்பிக்கப்படாமல் மறுக்கப்பட்டது.
ஊடகங்கள் தொடர்பான புகார் தெரிவிக்கும் மத்திய அமைப்பான
பி.சி.சி.சி. இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்தது.
வீடியோவின் தன்மையை ஆராயாமல் ஒளிபரப்பியதற்காக
மன்னிப்பு கோரும்படி, அந்த டிவிக்கு உத்தரவிட்டது. அதே
டிவியில் இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை, மன்னிப்பு
கோரும் வாசகங்களை வெளியிட வலியுறுத்தப்பட்டது.
வீடியோ பொய்யானது தான் ஒப்புக்கொண்டது சன் டிவி
இந்த வீடியோ காட்சி சம்பந்தமான தடயவியல் வல்லுனர்களின்
மிக விரிவான சாட்சிகளை தாண்டி கூடுதலாக ,
இது குறித்து செய்தியாளர்களிடம் வெளிப்படையாக பேசிய
ஹன்ஸ்ராஜ் சக்சேனா, அந்த வீடியோ போலியானது. அதன்
உண்மைத்தன்மையை ஆராயாமல் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
சன் டிவியின் செல்வாக்கை பயன்படுத்தி, ஸ்வாமிஜியை மிரட்டி
பணம் பறிக்க தீட்டப்பட்ட திட்டம் என்று வெளிப்படையாகவே
ஒப்புக் கொண்டார்.
(இது குறித்த மேலும் விவரங்களை, HinduismNow.org:
http://hinduismnow.org/blog/2016/02/17/ nithyananda-video- is-a- fake-
sun-tv- coo-hansraj- saxena-confesses என்ற இணையதளத்தில்
பார்க்கலாம்.
Nithyananda Video is Fake: Sun TV COO Hansraj Saxena Confesses
ஸ்வாமிஜிக்கு எதிரான சதி என்று, சன் டிவி அதிகாரி சக்சேனா
அளித்த இந்த பகிரங்க ஒப்புதல் வாக்குமூலம், சென்னை மாநகர
காவல்துறை ஆணையரிடம் வழங்கப்பட்டது.
சக்சேனாவே கையெழுத்திட்ட வாக்குமூலமாக, இது
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மாவட்ட
நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது.
சன் டிவி, சில நாத்திகவாத பத்திரிக்கைகளால், இந்து மதம்
தழைக்க பாடுபட்டு வரும் ஸ்வாமி பரமஹம்ஸ நித்யானந்தா
மீது இதுபோன்ற சமய தாக்குதல்கள் தொடுக்கப்பட்டது. இது
இந்து மதத்தின் மீதான தாக்குதலாகும்.
இதற்கு மற்றொரு உதாரணத்தை பார்க்கலாம். காஞ்சி
சங்கராச்சார்யார் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மீது
கொலைப்பழியை நாத்திகவாதிகள் சுமத்தினர். ஒன்பது
ஆண்டுகளாக நடந்த வழக்கில், கடந்தாண்டு அவர், சென்னை
உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.
கர்மவினையின் பயன் ……
சன் டிவிக்கு உரிமம் மறுப்பு
கலாநிதி மாறனின்
சன் டிவி, அவரது குழுமத்தின் 33 அலைவரிசைகளுக்கு ஒளிபரப்பு
உரிமம் மறுக்கப்பட்டது.
(இது தொடர்பான செய்தி, மற்றும் வீடியோக்களை
http://www.ibnlive.com/news/business/maran-owned- sun-tv- may-go- off-
air-after- home-ministry- denies-security- clearance-1003164.html ல்
பார்க்கலாம். )
மன்னிப்பு கோரிய சில ஊடகங்கள்!
ஸ்வாமி பரமஹம்ச நித்யானந்தா குறித்து போலியான அவதூறு
வீடியோக்களை ஆராயாமல் ஒளிபரப்பு செய்ததற்காக, மேலும்
சில ஊடகங்கள் பகிரங்கமாக மன்னிப்பு கோரின.
இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு,
From: http://www.nithyananda.org/news/national-channel- aaj-tak- and-
telugu-channel- tv10-tender- public-apology- paramahamsa-
nithyananda#gsc.tab=0
என்ற இணையதளத்தை பார்க்கவும்.
வரவேற்கத்தக்க ஒரு நடவடிக்கையாக, ஆஜ் தக் என்ற பிரபல
வட இந்திய டிவி, தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டு
பகிரங்கமாக ஒளிபரப்பியது. இது தொடர்பாக ஸ்வாமிஜிக்கு
எழுத்துபூர்மாகவும் அந்த டிவி, மன்னிப்பு கடிதம் தனது அனுப்பி
வருத்தத்தை தெரிவித்தது.
அந்த கடிதத்தில், ’கடந்த 2013ம் ஆண்டு செம்டம்பர் 13ம் தேதி
இரவு 11 மணிக்கும், செம்டம்பர் 19ம் தேதி பகம் 12:30 மணிக்கும்
பகிரங்க மன்னிப்பு கேட்டு டிவியில் ஒளிபரப்பியிருக்கிறோம்.
எனவே இதை ஏற்று மேற்கொண்டு நடவடிக்கையை எடுக்காமல்
இருக்க வேண்டும்,’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆஜ் தக் தொலைக்காட்சியில் இருந்து வந்த கடிதத்தை கீழே பார்க்கலாம்
இந்தியா டுடே குழுமத்திடம் இருந்து வந்த முறையான கடிதம்
(இது குறித்த செய்தியை, news bulletinல் காணலாம்)
அதேபோல் டிவி10 என்ற தெலுங்கு சேனலும், ஸ்வாமிஜி குறித்த
பொய் வீடியோவை ஒளிபரப்பு செய்ததமைக்காக தனது
நிபந்தனையற்ற மன்னிப்பை கேட்டு டிவியில் ஒளிபரப்பியது.
மேலும், ஸ்வாமிஜிக்கு மன்னிப்பு கடிதத்தை அனுப்பியது. அதில்,
‘கடந்த 2013 செப்டம்பர் 19ம் தேதி, எங்களின் டிவி10 சேனலில்
மன்னிப்பு கேட்டு ஒளிபரப்பியிருக்கிறோம். இனி இந்த போலி
வீடியோவை திரும்ப ஒளிபரப்ப மாட்டோம். இதை ஏற்று சட்ட
நடவடிக்கையை உடனே கைவிடுங்கள்’ என்று வேண்டுகோள்
விடப்பட்டிருந்தது.
TV 10 தொலைக்காட்சியில் இருந்து வந்த முறையான கடிதம் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது
To Read the English Article Click Here